வருகிற 05ம் தேதி திருச்சி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

 
ammk

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வருகிற 05ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய கழக மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 05.01.2025, ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி ஃபெமினா ஹோட்டல், காவேரி அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய கழக மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.