அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை! எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம்

 
amma medical

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா மருந்தகங்கள் தமிழகத்தில் மூடப்படுவதாக அறிக்கை கொடுத்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

amma pharmacy: அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை.. தமிழக அரசு பதில்! - tamil  nadu govt responds to allegation by edappadi palanisamy thant amma  pharmacies are closed down | Samayam Tamil

தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள், விலை உயர்ந்த மருந்துகளை விலை குறைவாக மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதை திமுக அரசு மூட நினைப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

அதற்கு பதில் தரும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ”அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். இந்த அரசு பதவியேற்றவுடன் கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்துகளின் எண்ணிக்கை 126 லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்துகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்கள் நடந்துவருகிறது.

ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவ்வாறு உணர்ந்ததாலேயே அம்மா மருந்தகங்களில் எண்ணிக்கை இந்த அரசு வந்தவுடன் உயர்த்தப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 40 கூட்டுறவு மருந்தகங்களை துவக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்., எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.