"தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
masu

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன என்றுமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

masu

சென்னை பெரியார் திடலில் சித்தா கோவிட்  சிகிச்சை மையம்  இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வெர்ச்சுவல்  மானிட்டர் முறையில் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கோவை , செங்கல்பட்டிலும் கொரோனா  தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். 

masu

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் முழுவதுமுள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது . அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன.   ஒரு ஆண்டு அடிப்படையில் தற்காலிகமாக அமைப்பாகத்தான் மினி கணக்குகள் தொடங்கப்பட்டன. செவிலியர்கள் இல்லாமல் கிளினிக்குகள் செயல்படாமல் இருந்தன. மினி கிளினிக்குகளுக்காக பணியமர்த்தப்பட்ட 1800 மருத்துவர்களை வேறு திட்டத்திற்கு பணி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது " என்றார்.