தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு! மீண்டும் ஏமாற்றிய பாஜக அரசு
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🔹சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு!
🔹காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு!
🔹சென்னை - மாமல்லபுரம் - கடலூர் இடையே 179 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க வெறும் .1,000 ஒதுக்கப்பட்டுள்ளது
🔹திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு
🔹ஈரோடு - பழனி 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டத்துக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு
🔹தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதால் அதிர்ச்சி
🔹ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் நிதி குறைப்பு அம்பலம்
🔹மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கப்படுவதாக எழுந்த புகார் ஓய்வதற்குள் பிற ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி குறைத்தது அம்பலம்