கள்ளச்சாராய விவகாரம்- கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக குற்றச்சாட்டு

 
கண்ணுக்குட்டி

கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி போலீசார் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

tt

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 65 பேர் உயிரிழந்துவிட்டனர்.  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று 65 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை, கண்ணுக்குட்டி, தாமோதரன், விஜயா உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கைதான கண்ணுக்குட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் மாமுல் வாங்கியது தெரியவந்துள்ளது. ஆகவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டிஎஸ்பிக்கள் உட்பட 9 போலீசாரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.