அஜித் ரசிகர்கள் கவலை..! விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது...!

 
1

மகிழ் திருமேனி இயக்கத்தில் இதுவரை வெளிவந்த 'தடையறத் தாக்க', 'மீகாமன்', 'தடம்', 'கலகத் தலைவன்', ஆகிய ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு வெவ்வேறு அனுபவங்களை வழங்கியவை ஆகும். இதனால் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற மகிழ் திருமேனி நடிகர் அஜித்தை வைத்து ஹாலிவுட்டின் 'Breakdown' திரைப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார். இதனால் 'விடாமுயற்சி' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மகிழ் திருமேனி விடாமுயற்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வருகிறார்.விடாமுயற்சி டீசர் கடந்த மாதம் வெளியானது. அதில், 'பொங்கல் 2025'இல் படம் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் சமீபத்தில் வெளியான Sawadeeka பாடல் குறித்த அறிவிப்பிலோ, பாடல் வீடியோவிலோ, X பதிவுகளிலோ பொங்கல் வெளியீடு என்பது படக்குழுவினரால் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நேற்றிரவு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. இதனால், பொங்கலை முன்னிட்டு வெளியாகாத விடாமுயற்சி திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்பதும் இதில் குறிப்பிடப்படவில்லை. 

இந்த அறிவிப்பால் பொங்கலை முன்னிட்டு அருண் விஜய் - பாலா கூட்டணியில் உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் மட்டுமே வெளியாகும். கூடவே சின்ன பட்ஜெட் படங்கள் சில வெளியாகவும் வாய்ப்புள்ளது.