கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

 
assembly

சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

tt

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் சட்டப்பேரவையில்  அமளியில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது , மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்றது.  அதிமுகவினரின் மனதையும் கண்களையும் உறுத்துகிறது.  எனவே சட்டப்பேரவை நடவடிக்கைகளில் திட்டமிட்டு இடையூறு செய்கின்றனர்.  இதை திட்டமிட்டு திசை திருப்ப இதுபோன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர். பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தவும் அதிமுக உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர். 

stalin

முன்னதாக சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவை காவலர்கள் அவர்களை வெளியேற்றினார்.