‘யார் அந்த சார்?’- பேட்சை கழற்ற மறுத்த அதிமுக கவுன்சில்கள் சஸ்பெண்ட்

 
ச்

கடலூர் மாநகராட்சி கூட்டத்திற்கு யார் அந்த சார் என்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து வந்ததால் அவர்களை இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்தார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார வழக்கில் யார் அந்த SIR? என்ற கேள்வி தமிழக அளவில் தற்பொழுது பரபரப்பாகி வரும் நிலையில் சட்டமன்றத்திற்கு வரும் அதிமுக உறுப்பினர்கள் யார் அந்த சார்? என்ற பேட்சை அணிந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக கவுன்சிலர்கள் யார் அந்த சார் என்ற பேட்ச் அணிந்து வந்து அவையில் அமர்ந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற கேள்வி தற்போது கடலூர் மாநகராட்சி வரை எதிரொலித்து வருகிறது. 

இந்நிலையில் இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேயர் மாமன்ற கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர் யார் அந்த சார் பேட்ஜை கழட்டவில்லை என்றால் அடுத்த கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்வேன் என எச்சரித்தார் இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் தற்போது எழுந்துள்ளது பேட்ஜை கழட்டவில்லை என்றால் வெளியேறுங்கள் என மேயர் எச்சரிக்கை விடுத்தார் ஆனால் அ தி மு க மாமன்ற உறுப்பினகள் வெளியேறாமல் வாக்குவாதம் அதிகரித்ததால் அடுத்த இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்கிறேன் என மேயர் சுந்தரி ராஜா அறிவித்தார்.