20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி
20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் நடிகர் கவுண்டமணியின் நிலம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்து 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கி வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் இடத்தை கையகப்படுத்த முயலவே சிவில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான 22,700 சதுர அடி பரப்பிலான நிலத்தில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஒப்பந்தப்படி, வணிக வளாகம் கட்டவில்லை என்பதால் ரூ.50 கோடி மதிப்பிலான தனது நிலத்தை வழங்க வேண்டும் என கவுண்டமணி கோரினார்.
இதற்காக நடிகர் கவுண்டமணி, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். தீர்ப்பு கவுண்டமணிக்கு சாதகமாக வரவே, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு பின் கவுண்டமணியின் வசம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
.


