புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்... 10 மாதங்களுக்கு பின் இண்டிகோ வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

 
indigo

புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை துவங்க உள்ளது.

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை: டிச.20 முதல் விமானங்களை  இயக்கும் இண்டிகோ | Dec 20 Indigo operates flights to Bengaluru and  Hyderabad from Puducherry - hindutamil.in

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள  விமான நிலையம்கடந்த 2013 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை செயல்பட துவங்கியது.   இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூர், ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. 

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி கடந்த ஆக்டோபர் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தனர். ஆனால் எதிர்பாராத காரணங்களால் இச்சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் வரும் டிசம்பர் 20ல் விமானசேவை தொடங்கப்படவுள்ளது. 

ಶೀಘ್ರ ಈ ಕೇಂದ್ರಾಡಳಿತ ಪ್ರದೇಶದಿಂದ ಬೆಂಗಳೂರಿಗೆ ವಿಮಾನ | Indigo Puducherry And  Bengaluru Flight Soon - Kannada Oneindia

இதுபற்றி புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு ஏடிஆர் 72 ரக விமான சேவையை வரும் டிசம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. இச்சேவை வாரம்  முழுக்க இருக்கும். பெங்களூரில் இருந்து 11.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். ஹேதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மாலை 6.35 சென்றடையும் என தெரிவித்துள்ளார்.