“ஆளுநர் கையொப்பமிட மறுத்தாலும் அதைமீறி ஈபிஎஸ் இதனை செய்தார்”... விஜயபாஸ்கர்

 
vijayabaskar

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கு சேர்ந்துள்ளனர். அவர்களை பாராட்டும் விதமாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கலந்துகொண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வாகியுள்ள ஐந்து மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். மேலும் அரசு மருத்துவ படிப்பை இலவசமாக வழங்கினாலும் மேற்கொண்டு ஐந்து மாணவ, மாணவிகளுக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் பிஜி படிப்பு வரை உதவி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் , “மாணவ மாணவிகள் படித்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை தான் உற்று நோக்கும். இது போன்ற ஏழை எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருகிறார்கள் என்றால் அதற்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தது தான். 

Image

ஆளுநர் கூட இந்த சட்டத்தில் கையொப்பமிட மறுத்த நிலையில், அரசுக்கு இருந்த உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி  7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தினார். எப்படி சத்துணவு திட்டம் என்ற புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்து எம்ஜிஆர் பெயர் எடுத்தாரோ அதேபோன்று தற்போது மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் சேர்வதற்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமி புகழ் பெற்றார். சத்துணவு திட்டத்திற்கு இணையான திட்டம் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிக அளவு காணப்படுகிறது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் 

@Vijayabaskarofl's video Tweet

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவ மாணவிகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.