செயற்குழு கூட்டம் வரும் டிச.1-ஆம் தேதி நடைபெறும்- அதிமுக

 
ops eps

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 1.12.2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Edappadi K.Palanisamy to compete in the 2021 elections as CM candidate for  AIADMK

இதுகுறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.