‘ஈபிஎஸ் ஒரு தற்குறி’... அண்ணாமலை மீது ஆவேசமடைந்த அதிமுகவினர்

 
அண்ணாமலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

Image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தரக்குறைவாக அவதூறாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசியதாக அதை கண்டிக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதிமுக தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிவா ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றதனர்.  போலீசார் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை தடுத்து பிடுங்கி சென்றனர். இதற்கு இடையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.  இதனால் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.