'பிரதமரை சந்தித்த ஓபிஎஸ்' - தர்மம் மீண்டும் வெல்லும் என நம்பிக்கை!!

 
ops

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு குஜராத் புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். 

op

இதையடுத்து பிரதமரை வழியனுப்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் , "பிரதமர் மோடி என் உடல்நிலை எப்படி உள்ளது என கேட்டார். நன்றாக உள்ளது என தெரிவித்தேன்;
உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று கூறினார் என்றார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் என்றார்.

modi
முன்னதாக அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிலையில் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதைத் தொடர்ந்து  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார் . பொதுக்குழு முடிவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ. பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்திலும் கடந்த 13ம் தேதி வழக்கு தொடர்ந்தார் . இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பியது.  மூன்று வார காலத்திற்குள் மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.