ரஜினியுடன் ஓபிஎஸ் சந்திப்பு
Oct 16, 2025, 21:42 IST1760631143079
ரஜினியுடன் ஓபிஎஸ் சந்திப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
தமிழகம் முழுவதும் வருகிற 20.10.2025 அன்று திங்கட்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே பெரும்பால மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்துடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சந்தித்தனர். இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.


