யார் அந்த சார்? - சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம்
எழுப்பினர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என கூறப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம்
எழுப்பினர். சட்டபேரவை வளாகத்திற்கு யார் அந்த சார்? என்ற வாசகம் பதிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.