உள்ளாட்சி தேர்தல்- அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 

உள்ளாட்சி தேர்தல்- அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்- அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஊராட்சி 18வது வார்டில் கண்ணன், சேலம் மாவட்ட ஊராட்சி 10 வது வார்டில் எம்.ஆர். முருகன், நாமக்கல் மாவட்ட ஊராட்சி 6 வது வார்டில் கண்ணன், ஈரோடு மாவட்ட ஊராட்சி 5 வது வார்டில் தங்கராசு, திருப்பூர் மாவட்ட ஊராட்சி 10 வது வார்டில் லட்சுமி சோமசுந்தரம், கரூர் மாவட்ட ஊராட்சி 8 வது வார்டில் தானேஷ், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி 16 வது வார்டில் இந்திரா, திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11 வது வார்டில் குருபரன், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9 வது வார்டில் அழகு சுந்தரி, மதுரை மாவட்ட ஊராட்சி 16 வது வார்டில் தமிழழகன், விருதுநகர் மாவட்ட ஊராட்சி 19 வது வார்டில் விஜயலட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி 7வது வார்டில் மாரி ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ளனர்.

இதேபோல் பூண்டி ஊராட்சி ஒன்றிய 3 வது வார்டில் காயத்ரி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய 15 வது வார்டில் தேவி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய 18 வது வார்டில் ஆலயசாமி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய 10 வது வார்டில் துரைமுருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய 2 வது வார்டில் செல்வி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய 2 வது வார்டில் ஆதிலட்சுமி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய 7 வது வார்டில் தமிழ்செல்வி, புவனகிரி ஊராட்சி ஒன்றிய 11 வது வார்டில் ராதாகிருஷ்ணன், குமராட்சி ஊராட்சி ஒன்றிய 19 வது வார்டில் சுந்தரமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய 10 வது வார்டில் அமலா, பர்கூர் ஊராட்சி ஒன்றிய 30 வது வார்டில் முகுந்தன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9 வது வார்டில் மாணிக்கம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய 15 வது வார்டில் விஜய், ஈரோடு ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டில் ஜெகதீசன், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய 10 வது வார்டில் பாலகிருஷ்ணன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய 11 வது வார்டில் லினீஷ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டில் சாமிநாதன், துறையூர் ஊராட்சி ஒன்றிய 13 வது வார்டில் அபிராமி சேகர், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய 6 வது வார்டில் ஜானகி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய 10 வது வார்டில் கனகவள்ளி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.