ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பாஜகவை தாஜா செய்கிறார் ஸ்டாலின்- ஜெயக்குமார்

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது. தன் தோழமை கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக அழைக்கவில்லை. ஆனால் ராஜ்நாத் சிங்கை அழைத்துள்ளனர்.  இதில் இருந்தே திமுக- பாஜக இடையே ரகசிய கள்ள உறவு இருப்பது தெரிகிறது

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு முதல்வரோடு, 8 அமைச்சர்கள் வந்தனர். இதற்கான அவசியம் என்ன? ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பாஜகவின் காலில் விழுந்து தாஜா செய்கிறார் ஸ்டாலின். புதுமையாக திட்டங்களை யோசிக்க, தெரியாமல் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது. தமிழகத்தில் சட்டம்,ஓழுங்கு சீர்குலைந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்” என்றார்.