"அதிமுக ஆட்சிக்கு வந்தபின் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 கொடுப்போம்" - ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji

அதிமுக ஆட்சிக்கு வந்தபின் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 கொடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

Rs 2,500 per month to all girls without discrimination when ADMK comes to  power - Rajendra Balaji | அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து  மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர ...
 
சிவகாசியில் அதிமுக செயல் வீரர்கள் பங்கேற்ற கூட்டம், உறுப்பினர்களின் உரிமைஅட்டை வழங்கும்விழா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “மக்களவைத் தேர்தலில் மோடி வேண்டுமா? என்று ஒரு அணி மோடி வேண்டாமா? என்று ஒரு அணி இருந்த போதிலும் அதையும் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி பெண்களுக்கு மாதம் ரூபாய் 2ஆயிரத்து 500 வழங்கப்படும். மத்திய அரசிடமிருந்து எப்படி நிதி வாங்க வேண்டுமென்பது எங்களுக்கு தெரியும்?

 
தேர்தலின் போது அதிமுக ஆட்சியின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. திமுக செய்யாத திட்டங்களையும் செய்ததாக விளம்பரப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதிக்கே வராமல் 3 முறை வெற்றி பெற்றவர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர். மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் அதிமுகவினர்களுக்கு தூசிதான். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது. 2026-ல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். எதிர்கட்சியாக இருக்கும் போது 'கோ - பேக்' மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பின் அமைதியாகிவிட்டது. தேசப்பற்று உள்ளவர்கள் அதிமுகவினர். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கண்ணீர் விடுபவர்கள் அதிமுகவினர், ஆனால் கை கொட்டி சிரிப்பவர்கள் திமுகவினர்” என்றார்.