சேகர்பாபு கோவில் நகைகளை திருடிவிட்டார்- முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

 
அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவிலில் உள்ள நகைகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் திருடியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தள்ளார்.

சிறிய தவறுக்கு பெரிய தண்டனையா?- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேட்டி | Former  Minister Manikandan Says Big penalty for small mistake

சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “200 தொகுதியில் வெற்றி பெறுவோம் எனக் கூறும் திமுக 20 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. தைரியம் இருந்தால் திமுக தனித்து போட்டியிட முடியுமா?, 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த வரலாற்றை உங்களால் செய்ய முடியுமா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சொன்ன பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தது. பாஜகவை போல் இருமாப்போடு பேசி வருகிறார் ஸ்டாலின். திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் 6 மணி நேரமாக காத்திருந்த பக்தர்களுக்கு உரிய வசதி செய்துதரப்படவில்லை என்ற புகாருக்கு இந்து அறநிலைய துறை அமைச்சர் திமிராக பதில் அளிக்கிறார். சேகர்பாபு பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஸ்ரீ ரெங்கம் கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி வங்கியில் வைத்ததாக சொல்லி தங்கத்தை கொள்ளையடித்துள்ளார். தைரியம் இருந்தால் கோவில்களில் உள்ள தங்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட முடியுமா? தங்கத்தை எங்கே திருடியுள்ளீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கம்! | nakkheeran


வரும் காலங்களில் சிவன் சொத்து குலா நாசம் என்பது போல் தெய்வத்தின் சொத்தை திருடியவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வெகு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவீர்கள். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தவறிய ஆட்சியாக கட்டப்பஞ்சாயத்து கூடாரமாக மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெகு விரைவில் ராஜினாமா செய்யும் காலம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு விரட்டி அடிப்போம்” என்றார்.