Budget 2024: பாஜக கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட்- ஈபிஎஸ்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. திமுக கூட்டணி எம்பிக்கள் 39 பேரும் தமிழகதிற்கு எந்த திட்டங்களையும் பெற்றுத்தரவில்லை.
பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, செலவு அறிக்கையில் இடம்பெறாதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இயற்கை விவசாயம், காய்கறி உற்பத்தி தொடர்பாக சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது" என்றார்.