தனபால் முதல்வராவதை அதிமுக பட்டியலின எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை- திவாகரன்

 
சசிகலாவின் சகோதரர் திவாகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 35 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை எதிர்ப்பு தெரிவித்தனர் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார்.

சசிகலாவை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்- திவாகரன் | Divakaran  said ADMK volunteers will accept Sasikala


புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த சசிகலாவின் சுதாகரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தலித் முதலமைச்சராக வருவதற்கு தலித் எம்எல்ஏக்களே எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 35 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை  எதிர்ப்பு தெரிவித்தனர்.

எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது- அ.தி.க திவாகரன் | nakkheeran

அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும். 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடந்து விடும். திமுக ஒன்றிய அரசோடு 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை, மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் ஒன்றிய அரசுக்கு மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் என்னைப் போன்ற கல்வியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடிக்கு அட்வைஸ் செய்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, அவர் என்னை விட சீனியர். எடப்பாடி பழனிசாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு தான் நடக்கும்” என்று தெரிவித்தார்.