சென்னைக்கு ரெட் அலர்ட் : செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு!!

 
chembarampakkam

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ம் தேதி,  தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும்.  இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,கடலூர் ,விழுப்புரம், ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

rain

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும்,   ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இதனால் தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

chembarampakkam

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  கடந்த 7 ஆம் தேதி சென்னையில் திறக்கப்பட்ட கனமழை காரணமாக, 2000  உபரி நீர் திறக்கப்பட்டது.மழை ஓய்ந்ததையடுத்து  250 கனஅடியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.