விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் கலந்துகொள்வேன் - நடிகர் விஷால்..

 
விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் கலந்துகொள்வேன் - நடிகர் விஷால்.. 

தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு விஜய் அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.  அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால், “வாக்காளர் என்ற முறையில் தவெக மாநாட்டில் கலந்து கொள்வேன்.  விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமலேயே செல்வேன்.  அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்கு கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மாநாட்டுக்கு செல்வேன். 

vijay

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார் ? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து  முடிவெடுக்க முடியும்.

 தமிழக வெற்றி கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.  சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். நானும் ஒரு அரசியல்வாதி தான்.” என்றார்.  ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் குளறுபடிகள்  குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “அவங்கவங்க பிரச்சனை; அவங்கவங்க கருத்து; அவங்க சர்ச்சை; அவரவர் திணிப்பு; அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.