ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது
Sep 8, 2024, 08:15 IST1725763520000
ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகர் விநாயகன். இவர் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் நடிகர் விநாயகன், ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களை தாக்கியதாக நடிகர் விநாயகன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த விநாயகன், ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது விநாயகன் போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.