நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி!!

 
tn

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி செலுத்தினார்.

TN'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.  20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
tn

இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊரான பசுமலைத்தேரியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி செலுத்தியுள்ளார். பசுமலைத்தேரியில் மாரிமுத்துவின் உடல் குடும்ப வழக்கப்படி சடங்குகள் முடிந்தபின், காலை 11 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.