விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது- சூர்யா

 
surya

வேளாண் சட்டத்தை மோடி அரசு ரத்து செய்ததற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Surya is extremely special... Do you know why? | The New Stuff

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் மசோதாக்களை கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இதனை கண்டித்து  புதுடில்லி, ஹரியானா, பஞ்சாப் , உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  பிரதமர் மோடி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக  நேற்று  அறிவித்தார் . 


இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “உழவே தலை! விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்… #FarmLawsRepealed #FarmLaws“ எனக் குறிப்பிட்டுள்ளார்.