பாதிக்கப்பட்ட மாணவியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தினர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
#Watch | "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிக்கணும்"
— Sun News (@sunnewstamil) January 6, 2025
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி#SunNews | #Tiruchendur | #Sivakarthikeyan | @Siva_Kartikeyan pic.twitter.com/3hpLCU4pTU
இதற்கு பதிலளித்து பேசிய அவர், இது மாதிரி விஷயங்கள் நடக்க கூடாது. காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் சரிதான். இருந்தாலும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட மாணவி உடன் தான் நிற்க வேண்டும். அந்த மாணவிக்கு முழு தைரியம் இருக்க வேண்டும். இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்க கூடாது என கடவுளிடம் வேண்டுவோம் என கூறினார்.