நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான் - நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2025
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025
இந்த நிலையில், பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் என குறிப்பிட்டுள்ளார்.