“விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்”- நடிகர் பார்த்திபன்

 
பார்த்திபன் பார்த்திபன்

விஜய் அரசியலுக்கு வந்ததை நகாரீகத்துடன் வரவேற்பதாகவும், கரூர் சம்பவம் தொடர்பான அஜித் கருத்துடன் உடன்படுவதாகவும் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையில் புதிய கல்லீரல் மையம் திறக்கப்பட்டது. இதன்மூலம் அதிநவீன எண்டோஸ்கோபி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் மட்டுமல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும். சமீபத்தில் சட்டசபையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கலகலப்பாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அதுதான் நாகரீகமான அரசியல். அதுபோல அரசியலில் விஜய்யை வரவேற்கிறேன். ஒரு கட்சிக்கு அரசியலில் வாய்ப்பு கொடுத்தால் 5 வருடம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதன்பின்னரே அதிருப்தி இருந்தால் தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும் என அஜித் சொன்னது எனக்கு பிடித்திருந்தது. அதேபோன்று முதல் முதல்காட்சியில் தியேட்டரை சீட்டுகளை கிழிப்பது தவறான என அஜித் குறிப்பிட்டதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. கரூர் சம்பவத்தில் விஜய் மட்டும் பொறுப்பல்ல என்று அஜித் சொல்லியிருப்பதன் மூலம், இனிமேல் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறக்கூடாது என்பதை அவர் கூறுகிறார் என புரிந்துகொள்கிறேன். 

கரூருக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்றால் கூட கூட்டம் எதிர்பாராத விதமாக கூடும். அதனால் அவர் பனையூரில் அழைத்து இறந்தவர்களை அழைத்து சந்தித்துள்ளார், அதில் அவருக்கும் மகிழ்ச்சி, அந்த குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி. அதில் தவறு எதுவும் இல்லை. எனக்கு சினிமா மூலம் பெரும் வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு பதிலுக்கு எதாவது செய்தவற்காக பார்த்திபன் மனிதநேய மன்றம் தொடங்கி சேவை செய்து வருகிறேன். Dude உள்ளிட்ட படங்கள் விமர்சனங்களுடன் வெளியாவது காலத்தின் கட்டாயம். பைசன் படம் பார்த்தேன் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. நடுத்தர வயது அம்மா ஒருவரை போலீசார் கஞ்சாவுடன் கைது செய்தனர். போதையில் சமூகம் ஊறியுள்ளது. அதனை மீட்கப் போராட வேண்டும். நான் தான் CM எனும் ஒரு படத்தை எடுத்து வருகிறேன். அதனை தேர்தலுக்குள் வெளியிட முயற்சிப்பேன். புதிய பார்வை படத்தை மீண்டும் நானே நடித்து எடுக்கப்போகிறேன். இனிமேல் மக்கள் விரும்பும் கமெர்சியல் திரைப்படம் எடுக்கப்போகிறேன்” என்று தெரிவித்தார்.