விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் மனு

 
ஜெயம் ரவி

விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரின் மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.

 jayam ravi aarthi ravi family court

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவி. இவர் சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன்ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர். ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக நேற்று அறிவித்தார். 

இதைத்தொடர்ந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரின் மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.