"ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்"- அஜித்குமார்

 
அஜித் அஜித்

என் பெயர் பிரபலமானதாக இல்லை என கூறி மாற்ற சொன்னார்கள், ஆனால் எனக்கு வேறு பெயர் வேண்டாம் என உறுதியாக சொன்னேன் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகர் அஜித்குமார், “ஆரம்ப காலத்தில் என்னால் தமிழ் சரியாக பேச முடியவில்லை. என் பெயர் பிரபலமானதாக இல்லை என கூறி மாற்ற சொன்னார்கள், ஆனால் எனக்கு வேறு பெயர் வேண்டாம் என உறுதியாக சொன்னேன். எனது திரை பயணத்தில் வந்த சவால்கள் அனைத்தையும் கடந்து வந்தேன், திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறி தான், சரியான குழுவை அமைக்க வேண்டும். F1 ரேசிங்கை பிரபலப்படுத்த முடிந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி. வெற்றி என்பது ஒரு காட்டு குதிரை போன்றது. யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறலாம், ஆனால் அதை அடக்க முடியாவிட்டால், அது உங்களைத் தூக்கி எறிந்துவிடும்.

ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், அதேசமயம் அந்த அன்பின் காரணமாக குடும்பத்துடன் வெளியே செல்வதில்லை. என் மகனை கூட பள்ளிக்கு என்னால் அழைடதட் செல்ல முடியாது. சில நேரங்களில் பணிவாக என்னை கிளம்புங்கள் என்று சொன்ன தருணங்களும் ஏற்பட்டுள்ளன்” என்றார்.