“ரேஸ் முடியும் வரை எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை”- அஜித் திடீர் அறிவிப்பு

 
ரசிகர் மரணம்.. நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்க  -  சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தல்..

அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்த படங்களிலும் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித் கூறியுள்ளார்.

Album - கார் ரேஸ் பயிற்சியில் அஜித் உற்சாகம் - புகைப்படத் தொகுப்பு | Actor  Ajith Kumar in car racing - photo gallery

24H துபாய் ரேசின்போது பேட்டியளித்த நடிகர் அஜித், “கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். எனது 18 வயதில் ரேஸிங் தொடங்கினேன், அதன் பின் சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ஆம் ஆண்டு EUROPEAN-2 இல் களமிறங்கினேன்; பின்னர் பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராகவும் வந்துள்ளேன். ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.

Thala Ajith Unhurt in Car Race Accident

2025 மார்ச் மாதத்திற்கு பிறகு தீவிரமாக ரேசிங்கில் ஈடுபட உள்ளென். மார்ச் மாதம் வரை சினிமா ஷூட்டிங்கில் பங்கேற்பேன். 2004 பார்முலா 3 போட்டியில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை ஏன் என்றால் அப்போது நான் இரண்டு படகுகளை ஓட்டிக்கொண்டிருந்தேன். அதில் ஒன்று சினிமா, மற்றொன்று ரேஸிங்.” என்றார்.



செம்டம்பர் மாதம் வரை நடப்பு கார் பந்தயம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.