இ-பாஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

 

இ-பாஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை தான் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், சென்னைவாசிகள் தென்மாவட்டங்களில் இருக்கும் சொந்த இடங்களை நோக்கி சென்ற வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக சென்னையில் கொரோனாவை கட்டுபடுத்துவது சவாலாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் அதனை பற்றியும் ஊரடங்கு பற்றியும் பல வதந்திகள் பரவி வருகின்றன.

இ-பாஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் விபரத்தை மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணிற்கு (04633-290548) எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே உண்மையை அறிந்து இ-பாஸ் கொடுக்கப்படும் என்றும் அந்த இ-பாஸ் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தயாளன் தெரிவித்துள்ளார்.