நா.த.க கட்சி பணி- வட்டாட்சியர் மீது அதிரடி நடவடிக்கை
Nov 15, 2024, 21:51 IST1731687717968
அரசியல் பணிகளில் ஈடுபட்ட நெல்லை மாவட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி அரசியல் பணிகளில் ஈடுபட்டதாக வரப்பெற்ற புகாரில், நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அரசியல் பணிகளில் ஈட்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் செல்வகுமார் மீது நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். எழுத்துப்பூர்வமாக செல்வக்குமாரிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.