நர்சிங் கல்லூரி தாளாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்- 14 பிரிவின் கீழ் வழக்கு

 
நர்சிங் கல்லூரி தாளாளர்

திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது புகார்கள் குவிந்து வருவதால், போக்சோ மற்றும் 14 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

students sexual harassment: ஆசைக்கு இணங்கினால் மட்டுமே சீட்... திண்டுக்கல் நர்சிங்  கல்லூரியில் மாணவிகள் சந்தித்த அவலம்... - sexual harassment complaint  against dindigul ...
திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரியில் மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாளாளர் ஜோதி முருகன் மற்றும் கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் விஷாகனிடம் மனு அளித்துள்ளனர். அதில், மாணவர்களின் கல்வியை சட்டரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அமைக்க உள்ள குழுவில் இந்திய மாணவர் சங்கத்தை இணைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.