இந்து சாஸ்திரப்படி சர்க்கரை கை தவறி கீழே கொட்டிவிட்டால் நல்லதா..? கெட்டதா..?
Dec 9, 2025, 05:25 IST1765238148000
கை தவறும் பொருட்களுக்கான பலன்கள் :
- குங்குமம் கை தவறி கீழே விழுந்து கொட்டினால் அதை அபசகுனம் என்று சொல்லுவதுண்டு. ஆனால் உண்மையிலேயே குங்குமம் கை தவறி கீழே கொட்டினால் வெற்றி மற்றும் அனுகூலமான பலன்களை பெறப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
- அரிசி கை தவறி கீழே கொட்டி விட்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவு, காரிய தடை ஏற்படும் என்று அர்த்தம். நீங்கள் ஏதேனும் புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதில் தடை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
- மஞ்சள் கீழே கொட்டினால் மங்களம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
- எண்ணெய் கை தவறி கீழே கொட்டி விட்டால் இழப்பு, துக்ககரமான செய்திகள் தேடி வரும் என்று அர்த்தம். நீங்கள் ஏதாவது தொழில் செய்பவராக இருந்தால், அதில் பொருள் நெருக்கடி, தடை, மற்றவர்கள் உங்களை குறை சொல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.
- சில சமயம் வீட்டில் பால் காய்ச்சி அடுப்பில் இருந்து இறக்கும் போது கை தவறி கீழே கொட்டி விடும். இன்னும் சில நேரங்களில் பூனை பாலை தட்டிவிட்டு விடும். இதற்கு கலகம், தோல்வி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- சர்க்கரை கீழே கொட்டுவதற்கு நல்ல பலன்களே சொல்லப்படுகிறது. சர்க்கரை தரையில் சிந்துவதால் புகழ் ஏற்படும். நாம் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்பதே பொருள்.
- தேங்காய் கை தவறி கீழே விழுவதால் தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய செயலில் ஏற்படவிருக்கும் தடை அனைத்தும் நீங்கும்.
- பூக்கள் கை தவறி கீழே கொட்டினால் காரிய வெற்றி, பக்தி, நன்மை உண்டாகும்.
- உப்பு கீழே சிந்துவது குடும்பத்திற்கு நல்லதல்ல. உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் அதை கீழே தவற விடுவதால் குடும்பத்தில் விரும்பத்தகாத பலன்கள் ஏற்படலாம். பண விரயம், பணத் தடை ஆகியவை ஏற்படலாம்.
- தண்ணீர் கை தவறி கீழே சிந்துவது கடன் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிப்பாதாகும்.
- விளக்கு கீழே தவறி விழுவது ஆபத்திற்கான அறிகுறியாகும். தீயசக்திகள் நம்மை சுற்றி இருப்பதை குறிப்பதாகும்.


