ஆண் நண்பரின் மனைவி, மகள் குறித்து ஆபாச பதிவு.. இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது..

 
கைது

கோவையில் ஆண் நண்பரின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமான பதிவிட்ட இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ஆண் நண்பரின் மனைவி, மகள் குறித்து ஆபாச பதிவு.. இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது..

ஓரோட்டைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக  நெருங்கிய தொடர்பு  இருந்து வந்துள்ளது.   ஆனால் ரமேஷ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு 15 வயதில் மகளும் உள்ளார். இந்த நிலையில் உமா ரஞ்சனி, ரமேஷின் தகாத உறவு அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது.  இரு வீட்டாரின் வற்புறுத்தலின்பேரில், இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது.

ஆண் நண்பரின் மனைவி, மகள் குறித்து ஆபாச பதிவு.. இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது..

ஆனாலும் ரமேஷின் குடும்பத்தினர் மீது உமா ரஞ்சனி ஆத்திரத்திலேயே இருந்திருக்கிறார். இதனால் பேஸ்புக்கில் ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து ஆபாசமான பதிவுகளை செய்திருக்கிறார். இதனையறிந்த ரமேஷும் அவரது குடும்பத்தினரும், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் உமா ரஞ்சனியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தான் ரமேஷை பிரிய  அவரது மனைவியும், மகளுமே காரணம் என்பதால் அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டதாகவும், ஆகையால் தான் பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட உமா ரஞ்சனியை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.