சீமானை விட்டு ஸ்டாலின் பக்கம் சாய்ந்த 500 பேர்!

 

சீமானை விட்டு ஸ்டாலின் பக்கம் சாய்ந்த 500 பேர்!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சீமானை விட்டு ஸ்டாலின் பக்கம் சாய்ந்த 500 பேர்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் முக்கிய மிகப்பெரிய கட்சிகளாக பார்க்கப்படும் திமுக – அதிமுக கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அறிவிக்காவிட்டாலும் ஓரளவு யூகிக்க கூடிய அளவிலேயே உள்ளது. அதே சமயம் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தாவல்கள் அரசியல் சாதாரணமானவை தான்.

சீமானை விட்டு ஸ்டாலின் பக்கம் சாய்ந்த 500 பேர்!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இதனால் நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது.அதன்படி இன்று 500பேர் இணைந்துள்ளனர்.

முன்னதாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு கட்சிகளில் இணைய தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.