“என் ஆசான் திருமாவளவன்; வாழ்த்து பெற வந்தேன்”- ஆதவ் அர்ஜூனா

 
க்

தவெகவில் இணைந்த பிறகு விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து பெற்றார்.

க்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “எங்கு கள அரசியலை கற்றுக் கொண்டேனோ அங்கேயே ஆசி வாங்க வந்திருக்கிறேன். பெரியார், அம்பேத்கரின் கொள்கைகளை அண்ணன் திருமாவளவனிடம் இருந்து உள்வாங்கி கள அரசியலை கற்றுக் கொண்டேன். தவெகவில் என்னுடைய பணி மக்களுக்காக இருக்கும். அதற்கு அண்ணனிடம் வாழ்த்து பெற வந்தேன். தவெகவும், விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை. கொள்கை ரீதியானவற்றை திருமாவளவனிடம் கற்றேன். அவர்தான் ஆசான். எனக்கும் திருமாவளவனுக்கும் இடையே கொள்கை ரீதியாக மாறுபாடு இல்லை. ஒற்றுமையாக உள்ளோம். கொள்கை ரீதியாக என்னுடைய பங்களிப்பு தவெகவில் இருக்கும். திருமாவளவன் வாழ்த்து சொன்னார். நிறைய அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அதிகாரத்தை நோக்கிய பயணத்தில், கொள்கைப்படி அரசியலை உருவாக்க வேண்டும் என என்னிடம் வலியுறுத்தினார்” எனக் கூறினார்.