திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்!

 
deepan

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி(31). இவர் மாதவரத்தை சேர்ந்த 28 வயது பெண்ணை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம்  செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

இந்நிலையில் அப்பெண் திருமணம் செய்து கொள்ளும்படி கூறிய போது தீபன் சக்ரவர்த்தி  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து  பாதிக்கப்பட்ட பெண் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்  தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பின்னர்  சிறுசேரி அருகே தலைமறைவாக இருந்த  தீபன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.