சேலத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தோப்புகாரன்காடு பகுதியை சார்ந்த ஈஸ்வரனை இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் கறிக்கடை பஸ் ஸ்டாப் அருகில் ஜவுளி கடைக்குள் புகுந்து இளைஞர் ஒருவர், ஈஸ்வரன் என்பவரை நான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, ராசிக்கவுண்டனூர் பகுதியைச் சார்ந்த தங்கதுரை என்ற இளைஞர், திடீரென நண்பர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டில் இருந்த ஈஸ்வரனை அறிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். ஈஸ்வரனை தங்கதுரை என்பவர் அரிவாளால் வெட்டும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கதுரையை தேடி வருகின்றனர். மேலும் கையில் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த ஈஸ்வரனை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.