வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணின் இடுப்பில் கைவைத்து பாலியல் தொல்லை

 
rape

சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கப்பல் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Sexual Abuse, Sexual Assault and Molestation - TorkLaw

புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண், தண்டையார்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். வீட்டு வேலை முடிந்து பின்னர்  லிப்டில் ஏறும்போது, மேல் வீட்டில் வசிக்கும்  சேகர் என்பவர் அருகில் நின்று உரசுவது போல் நிற்பதாகவும் தன்னிடம் செல்போன் நம்பரை கேட்டு தொல்லை செய்து வருவதாக புதுவண்ணாரப்பேட்டை காவல்நலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்  மேலும் தன்னைப் பின் தொடர்ந்து வந்து தொல்லை தருவதாக கூறியிருந்தார்.

வேலை செய்யும் வீட்டின் உரிமையாளரிடம் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சேகர் சைக்கிளை ஓட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தை இடித்து பெண்ணின் இடுப்புப் பகுதியில் கை வைத்து உரசி உள்ளதால் ஆத்திரமடைந்த பெண், தட்டிக்கேட்டகவே  பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளார் 

இதனையடுத்து  புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரித்ததில், தவறாக நடந்து கொண்டவர் ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் என்றும் அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசித்தது தெரியவந்தது இதனையடுத்து தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.