மிட்டாய் சாப்பிட்டபோது மூச்சு திணறல் ஏற்பட்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

 
baby leg

மிட்டாய் சாப்பிட்ட  ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Baby dies after falling into hot water | வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை  உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஞானசேகர் (24), மலர் நிகா (21) ஆகிய தம்பதியினருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஞானசேகர் மரணமடைந்துள்ளார். தாயுடன் வளர்ந்து வந்த ஹர்ஷனுக்கு நேற்று மாலையில் மலர்நிகா ஜெல்லி மிட்டாய் வாங்கி  கொடுத்துள்ளார். குழந்தை அதை விழுங்கிய போது குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹர்ஷனை  சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தை ஹர்ஷனை பரிசோதித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது  குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்த ஒன்றரை வயது குழந்தை ஹர்ஷனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதில் உணவுக் குழாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.