"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது"
Nov 28, 2024, 20:15 IST1732805157000
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மேலும் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகரும் இது, நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.