மீன் ஏற்றிச் சென்ற லாரி டயர் வெடித்து விபத்து- போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

 
மீன் ஏற்றிச் சென்ற லாரி டயர் வெடித்து விபத்து- போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வாகனத்தில் இருந்த மீன்கள் மொத்தமும் சிதறி சாலையில் கொட்டியது.

Image


சாலையில் கொட்டிய மீன்களை அப்பகுதி மக்களும் வழியில் சென்ற வாகன ஓட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்   மினி லாரியை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநரின் பெயர் சதீஷ் வயது 28 என்பதும், சென்னை காவாங்கரையிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்றதும் தெரியவந்தது..

சாலையில் கொட்டிய மீன்களை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லி சென்றனர். அந்த காட்சிகளும் இணையத்தில் பரவுகிறது. அதே போல சாலையில் கொட்டிய ஐஸ் கட்டிகளை போக்குவரத்து போலீசார் துடப்பம் மற்றும் மண்வெட்டி மூலம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இந்த லாரி கலந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் போக்குவரத்தில் சில ஏற்பட்டது.