காதலனுடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

 
accident accident

சென்னை அடுத்த ஓட்டேரியில் காதலனுடன் சென்ற பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் இரண்டு கால்களும் துண்டாகின.

Death


சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ஆலையைச் சேர்ந்தவர் அசோக்(19). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவர் அயனாவத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் 16 வயது சிறுமி( ரித்திகாவை) காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அயனாவரத்தில் இருந்து சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஓட்டேரி செங்கை சிவம் பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதியது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் காதலன் அசோக்குக்கு இரண்டு கால்களும் துண்டாகின.


இதே போல சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த புதுப்பேட்டையில் மெக்கானிக் பணியாற்றி வந்த இக்ரம் உசேன்(20) தனது சித்தப்பா மகளை ஏற்றிக்கொண்டு, அவரது வீட்டில் விடுவதற்காக பெரம்பூர் ஜமாலியா நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் இறக்கத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதியது.இதில் இக்ரம் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது சித்தப்பா மகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.