4 மாத கர்ப்பிணியை கொலை செய்த முன்னாள் காதலன் கைது

 
Lover

ஈரோடு அருகே திருமணத்திற்கு பிறகும்  காதலனுடன் தொடர்பில் இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையத்தில், கார்த்தி என்பவரது 4 மாத கர்ப்பிணி மனைவி பிருந்தா வீட்டில் மர்ம்மான முறையில் உயிரிழந்து கிடந்தார். புகாரின்பேரில்,  சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பின் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் பிருந்தாவின் செல்போனை ஆய்வு செய்ததில் அவரது முன்னாள் காதலன் அரவிந்த் சிக்கினார்.


பிருந்தா ஒரே சமயத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்தியையும், சமூக வலை தளத்தில் அறிமுகமான திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்தையும் காதலித்துள்ளார். இதில் கார்த்தியை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்துக்கு பின்னரும் அரவிந்துடன் பேசிவந்துள்ளார். இரவு பணிக்கு கார்த்திக் சென்றபிறகு, அரவிந்த் உடன் பிருந்தா தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதற்காக அரவிந்த், திண்டுக்கல்லில் இருந்து அடிக்கடி வந்து பிருந்தாவுடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில்,இருவரும் ஒன்றாக இருக்கும்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அரவிந்த், பிருந்தாவை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அரவிந்தை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.