ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்குவாரா ஸ்டாலின்? - நாராயணன் திருப்பதி கேள்வி!

 
tn

முதல்வர் ஸ்டாலின் இந்துக்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை, திமுகவில் இருந்து நீக்குவாரா? என்று  நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து  தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக துணைபொதுச் செயலாளர் ஆ.ராசா, இந்துக்களை இழிவாக பேசும் காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது.

a

‘‘எங்கள் கட்சியில் இருப்பவர்கள் 90 சதவீதம் இந்துக்கள்தான். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இந்து மதத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை உள்ளது’’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். திமுகவினரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கடவுள் மீதும், இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதோடு, தொடர்ந்து பல கோயில்களுக்கு சென்று வழிபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

tn

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போது ஆ.ராசாவை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து,தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா?ஆ.ராசாவின் கேள்விகள் திமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு என்றால், சொந்த கட்சி தொண்டர்களின் குடும்பத்தினரை இழிவுபடுத்திய ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்குவாரா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.