சிறையிலிருந்து கட்சியை நடத்துவாரா எடப்பாடி?

 
e

சிறையில் இருந்து கட்சியை நடத்துவாரா எடப்பாடி பழனிச்சாமி என்று கேட்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

 அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் புகழேந்தி.  

 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் புகழேந்தி.  அப்போது, நேற்றைய தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பின்னடைவு கிடையாது.   அதை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறோம்.   அதிமுக கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் போவார்.  அவர் செல்வதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?  நீதிமன்றம் மட்டும் அல்ல மக்கள் மன்றமே எங்கள் பின்னால் நிற்கிறது என்றார்.

p

 அவர் மேலும்,  கடந்த 11 ஆம் தேதி அன்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து,   11ஆம் தேதி நடந்த அனைத்து அக்கிரமத்திற்கும் காரணம் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் தான் பொறுப்பு.   போலீசார் மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் சில கொலைகள் நிகழ்ந்திருக்கும் என்று சொன்னவர்,   முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு  நடந்த வருகிறது .  எடப்பாடி மீதும் புகார்கள் இருந்து வருகிறது.   சிறையில் இருந்து கட்சியை நடத்துவாரா எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்வியை எழுப்பியவர்,

 கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்தார்.    முதல்வரை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் கிடையாது.  கொரோனா தொற்றில் இருந்த போது கூட கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார் முதல்வர். . ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்? இது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது என்று எச்சரித்தார்.